சமையல் குறிப்புகள்
கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட்
காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று குடைமிளகாயில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் – தலா பாதி அளவு,
- லெட்டூஸ் இலை – சிறிதளவு,
- தக்காளி – 1,
- ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்,
- எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
- புதினா – சிறிதளவு,
- தேன் – ஒரு டீஸ்பூன்,
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- மூன்று நிற குடைமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
- தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும்.
- லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.
- புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலை, நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாயை போட்டு அத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
- சூப்பரான கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட் ரெடி.
குறிப்பு: டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.