மாதவிடாய்க்கு பின் எப்போது கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள். செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும். சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்