Uncategorised

குழந்தை பேசுவது, படிப்பதில் குறையா?- காதை பரிசோதியுங்கள்

ஒரு குழந்தை தாய்தந்தை உள்பட பிறர் பேசுவதை கேட்டு கற்றுக் கொள்கிறது. காது கேட்பதில் பிரச்சினை இருக்கும் குழந்தைக்கு பேச்சை கேட்டு கற்றுக் கொள்ளத் தெரியாது. இவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பேச்சு வராமல் இருக்கும். அவர்கள் பேசுவதில், படிப்பதில் சிரமப்படும். மதுரை கே.கே.நகர் வக்போர்டு கல்லூரிக்கு எதிரில் இயங்கும் ஏ.எச்.எ.பி காது கருவி மையம் காது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து நன்கு பேசவும் படிக்கவும் உதவுகிறது.

மரபணு கோளாறு, நெருங்கிய உறவு திருமணம், ரத்த பிரிவு பிரச்சினை, ஊட்டச் சத்து குறைவு,குறைந்த எடை குழந்தைகள், கர்ப்பத்தில் தொற்றுநோய், காது நரம்பு பாதிப்பு ஆகியகாரணங்களால் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறைகிறது. காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை கேட்பியல் நிபுணரிடம் காட்டி காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டும்.



கேட்பு திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான காதுகருவியை பொருத்தி பயிற்சி தரும் போது அவர்களின் பேச்சு, மொழி, கேட்பு திறன் மேம்படுகிறது. எங்களிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போலவே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை 5 வயதில் இங்கு பயிற்சிககு கொண்டு வரப்பட்டு நல்ல பேச்சு பயிற்சி தரப்பட்டு தற்போது, அவன் கல்லூரி படிப்பை எட்டியுள்ளான். இவனை போல 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயிற்சி பெற்று தற்போது தமிழ் ஆங்கில வழி பள்ளி, கல்லூரி படிப்பை சிறப்பாக பயின்று வருகின்றனர்.

இந்த மையத்தில், குழந்தைகளின் ஆட்டிசம் என்னும் குறைபாடு, வயதுக்கேற்ற வளர்ச்சி இன்மை, சரியான வயதில் பேச்சு வராதது, அன்ன பிளவு, திக்குவாய், உச்சரிப்பு பிழை, குரல் மாற்றம், அன்னம் மற்றும் உதடு பிளவு, விழுங்குவதில் சிரமம், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேச இயலாமல் போவது, சில நேரங்களில் பேசவே இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு கூட பயிற்சிகள் நிபுணர்களால் வழங்கப்பபட்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாற்று வழிகள் கற்றுத் தரப்படும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker