சமையல் குறிப்புகள்
புரோட்டீன் நிறைந்த அடை
புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று புரோட்டீன் நிறைந்த பருப்பு வகைகளை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- இட்லி அரிசி – 100 கிராம்,
- முளைகட்டிய பாசிப்பயிறு – 50 கிராம்,
- கொண்டைக்கடலை – 50 கிராம்,
- கொள்ளு – 50 கிராம்,
- கோதுமை – 50 கிராம்
- உளுந்து – 50 கிராம்,
- காய்ந்த மிளகாய் – 4,
- மிளகு – ஒரு டீஸ்பூன்,
- தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு,
- உப்பு எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
- இட்லி அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- முளைகட்டிய பயறு மற்றும் மற்ற பயறு வகைகளை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
- அரிசி, பயறு வகைகளை காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும்.
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.