சமையல் குறிப்புகள்

தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம்

முருங்கைக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குழிப்பணியாரம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • இட்லி அரிசி – ஒரு கப்
 • வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
 • முருங்கைக்கீரை – ஒரு கப்
 • வெங்காயம் – 1
 • இஞ்சி – சிறிய துண்டு,
 • பச்சை மிளகாய் – 3
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :

 • முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
 • வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • அரிசி, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
 • கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைக்கீரை, உப்பு போட்டு போட்டு வதக்கவும்.
 • கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது.
 • வதக்கிய கீரையை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
 • சூப்பரான முருங்கைக்கீரை குழிப்பணியாரம் ரெடி.
 • இந்தப் பணியாரத்துக்கு சாம்பார் தொட்டுச் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker