ஆரோக்கியம்மருத்துவம்

கெட்ட கொழுப்பை நீக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மை புரிகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது.

வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது, என்பார்கள். அது அறிவு வளத்தை தூண்டும் ஒரு காய் என்றும் கூறுகிறார்கள். இந்த வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டை பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் போன்றவையும் தணியும்.



வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரை காயவைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்கு குளிர்ச்சியை தரவும், தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.



உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயதுடிப்பை சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாக திகழ்கிறது.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker