மனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்
கணவரின் விசித்திர குணங்களை புரிந்து கொண்டு, சில பழக்கங்கள் மோசமானவையாக இருந்தால், மாற்ற முயலுங்கள்..! இல்லற வாழ்க்கையை இனிதாய் மாற்றுங்கள்..
ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த இருபாலினரும் உடலளவில் மட்டும் வேறுபட்டவரல்ல; அவர்களின் குணங்களும் செய்கைகளும் விருப்பங்களும் அதிகம் வேறுபட்டவை. திருமணம் என்ற பந்தத்தால், இவ்விரு வேறுபட்ட மனிதர்கள் இணையும் போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிவதில்லை.
உங்கள் கணவர் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில், உங்களுக்கு உங்கள் கணவர் பற்றிய தெளிவை உருவாக்கவே இந்த பதிப்பு.. படித்து, கணவரை புரிந்து கொள்ளுங்கள்..காதலுடன் வாழுங்கள்..!
1. ஆண்கள் பெரும்பாலும் விளையாடுவதில், விளையாட்டு சேனல்கள் பார்ப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர்; இது அவர்களின் அடிப்படை குணாதிசயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்ற உண்மையை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்..
2. பெரும்பாலான ஆண்கள் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காது, குப்பை போல் போட்டுவிடக் கூடிய இயல்பு கொண்டவர்கள். பெண்களுக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர்களின் உதிரத்தில் கலந்து விட்டிருக்கும். ஆகையால் பெண்களே! நீங்களே உங்களது கணவன்மார்களை திருத்த வேண்டும் அல்லது அவர்களை புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
3. பெரும்பாலான கணவர்கள் வீட்டின் நிதி நிலையை மேம்படுத்த வேலை! வேலை! என்று உழைத்துக் கொட்டி, சம்பாதிக்க முயல்வர்; மனைவியான நீங்களே அவரின் மனநிலையை மாற்றி, அளவான சம்பாத்தியம் போதும்; நிகழ்கால வாழ்க்கையை இழக்காமல், மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள் என்று எடுத்துரைக்க வேண்டும்.
4. தற்கால தொழில்நுட்பங்கள் உங்கள் கணவருக்கு, ஏற்கனவே இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் பல புதிய கேம்களை அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தை குறை கூற முடியாது; உங்கள் கணவர் அளவாக கேம் விளையாடினால், அது அவரின் உடல் நலத்திற்கு நல்லது; அளவு மீறாமல், அவரை குறை கூறாமல் இந்த பழக்கத்தை மாற்ற முயலுங்கள்..
5. கணவர்கள் விதவிதமான வாகனங்கள் வாங்குவதிலும், அதை பழுது பார்ப்பது, புது வாகனங்கள் பற்றிய தகவல்கள் அறிவது என இதுமாதிரியான விஷயங்களில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கும். இதை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
6. கழிவறையில் என்னதான் இருக்குமோ தெரியாது., இந்த ஆண்மக்கள் உள்ளே சென்றால், வெளியே வர மணிக்கணக்காக்குவர்; அங்கே உட்கார்ந்து செய்தித்தாள் படிப்பது, அலைபேசியில் கேம் விளையாடுவது என எதையாவது செய்து கொண்டிருப்பர். இந்த விசித்திர பழக்கத்தையும் நீங்கள் சகித்து தான் ஆக வேண்டும் பெண்களே..!
இத்தகைய கணவரின் விசித்திர குணங்களை புரிந்து கொண்டு, சில பழக்கங்கள் மோசமானவையாக இருந்தால், மாற்ற முயலுங்கள்..! இல்லற வாழ்க்கையை இனிதாய் மாற்றுங்கள்..