சமையல் குறிப்புகள்

இட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து

கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை. இன்று இந்த கொஸ்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பாசிப் பருப்பு – 1 கப்
  • பச்சைப் பயறு – 2 கரண்டி
  • நிலக்கடலை – 2 கரண்டி
  • கொள்ளு – 2 கரண்டி
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 4
  • பச்சை கத்தரிக்காய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சீரகம் – 1/4 தேக்கரண்டி
  • சாம்பார் பொடி, உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.
  • வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.
  • இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker