சமையல் குறிப்புகள்
குளுகுளு மாம்பழ கிரீம் புட்டிங்
குழந்தைகளுக்கு மாம்பழ கிரீம் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- கிரீம் – 1/2 கப்,
- கிரீம் சீஸ் -2 கப்,
- சர்க்கரை – 2 கப்,
- ஜெலட்டின் – 1 டீஸ்பூன்,
- தண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)
- மாம்பழ எசென்ஸ் – சிறு துளி,
- கொட்டையில்லாத திராட்சைப்பழம் – 1/4 கிலோ
- மாம்பழம் – 1 கப்.
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.
- இப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.
- ஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- கடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.
- சூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.
- மாம்பழ சீசன் முடிந்தவுடன், அதற்குப் பதில் பைனாப்பிள், கொட்டையில்லா திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.