உறவுகள்புதியவை

இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்…!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான். ஏனெனில் திருமணத்திற்கு முன்பு இருந்த ஒருவரின் வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான ஒருவரின் வாழ்க்கைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும்.

திருமணம் செய்வதற்கு வயதோ, வருமானமோ மட்டும் முக்கியமல்ல. திருமணம் செய்து கொள்ள மனதளவில் பக்குவமும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனமும், எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களும் இருக்க வேண்டும். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் மனதளவில் எப்படி தயாராகி கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமணத்தில் நம்பிக்கை வையுங்கள்

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் அடிப்படையாகும். எனவே எதிர்பாலினத்தருடன் மிக நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும். இந்த செயல்களில் நீங்கள் ஈடுபட்டால், உங்கள் திருமண வாழ்க்கையில் மோசமான காலக்கட்டம் ஏற்படும்போது நீங்கள் வேறு துணையை நோக்கி செல்வீர்களே தவிர உங்கள் துணையை நோக்கி நகர மாட்டிர்கள்.

உங்கள் துணையை விமர்சிக்காதீர்கள்

உங்கள் துணையை விமர்சிக்கும் பழக்கம் உள்ளதா உங்களுக்கு? திருமண உறவை முறிக்கும் மோசமான ஆயுதம் விமர்சனம் ஆகும். உங்கள் துணையை ஒட்டுமொத்தமாக விமர்சிக்காமல் குறிப்பிட்ட சிக்கலை பற்றி மட்டும் விவாதிப்பது தம்பதிகளுக்கிடையே ஏற்படும் பிரிவை குறைக்கும்.

உங்கள் துணை சொல்வதை கவனியுங்கள்

திருமண வாழ்க்கை அழகாவதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்போதுதான். உங்கள் துணை பேசும்போது அவர்களை சொல்வதை கவனிக்க மறந்து விடாதீர்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கும் பரஸ்பரம் மரியாதை செலுத்துவது அவசியமாகும்.

ஒன்றாக வேடிக்கையை அனுபவிக்க வேண்டும்

உங்கள் இருவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு பொதுவான விஷயத்தை கண்டுபிடியுங்கள் அதன்பின் உங்கள் நேரத்தை அதில் செலவழியுங்கள். அது உடற்பயிற்சியாகவோ, பிடித்த நிகழ்ச்சியாகவோ எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் அதனை தொடர்ந்து செய்யுங்கள்.

அமைதியை கடைபிடிக்கவும்

உங்கள் துணையுடன் பேசும்போது அமைதியான மற்றும் அழகான சொல்லாடல்களை பயன்படுத்தவும். அமைதியாக இருப்பது உங்களை காட்டக்கூடாது மாறாக உங்களின் துணை மேல் நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.

பொறுப்பேற்று கொள்ளுங்கள்

இருவரில் ஒருவருக்காவது இந்த குணம் இருக்க வேண்டும். இந்த் குணம் உறவின் தன்மையையே மாற்றக்கூடும். ஒருவரின் இந்த குணம் மற்றவரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். தேவைப்படும் நேரத்தில் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்கவும். இது அவர்களின் மனதை மாற்றவும், மன்னிப்பை விரைவாகவும் பெற்றுத்தரும்.

மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்

மன்னிப்பு நீங்கள் அடைந்த காயத்திற்கு மருந்தாக இருக்காது ஆனால் நீங்கள் அதனை மறக்க உதவும். உங்கள் இருவரின் வாழ்க்கையும் பிணைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் துணையை அவர்களின் உண்மை முகத்தோடு ஏற்றுக்கொள்ளவும், அதிகம் புரிந்து கொள்ளவும் தயாராகி கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker