சமையல் குறிப்புகள்
சைனீஸ் ஸ்டைல் தக்காளி முட்டை சாதம்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து சைனீஸ் ஸ்டைலில் அருமையான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – 1 கப்
செய்முறை :
- பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.
- பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.
- பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
- இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!