சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் புலாவ்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பன்னீர் – 250 கிராம்,
  • உதிரியாக வடித்த சாதம் – 2 கப்,
  • வெங்காயம் – ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
  • பட்டை – சிறிய துண்டு,
  • கிராம்பு, ஏலக்காய் தலா – 2,
  • பிரியாணி இலை – ஒன்று,
  • பச்சை மிளகாய் – 4,
  • நெய் – ஒரு டீஸ்பூன்,
  • புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.
  • கலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  • மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • சுவையான பன்னீர் புலாவ் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker