சமையல் குறிப்புகள்

செட்டிநாடு ஃபிஷ் மசாலா

தயிர் சாதம், புலாவ், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த செட்டிநாடு ஃபிஷ் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • மீன் – அரை கிலோ,
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
  • புளிக்கரைசல் – 3 டேபிள்ஸ்பூன்,
  • நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
  • அரைத்த தேங்காய் விழுது – 1/2 மூடி,
  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்,
  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
  • தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
  • வெங்காயம் – 2,
  • தக்காளி – 2,
  • சின்ன வெங்காயம் – 10,
  • பூண்டு பல் – 5,
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
  • கடுகு – 1/4 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை,
  • கொத்தமல்லித்தழை – சிறிது.

செய்முறை

  • வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, சிறிது புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும்.
  • கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி, வெங்காயம் ஆறியதும் மிக்சியில் போட்டு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மசாலா பச்சை வாசனை போனவுடன் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் மீனை போட்டு 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
  • சூப்பரான செட்டிநாடு ஃபிஷ் மசாலா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker