ஆரோக்கியம்
முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்களும்… தீர்வும்…
தசைகளின் காரணத்தினால் ஏற்படும் வலி சில பயிற்சிகள், சிறிது ஓய்வு இவற்றின் மூலம் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பல பிரச்சினைகளைக் கூறும் அறிகுறிகளாக இருக்கலாம்.
* முதுகுவலி இன்றைய கால கட்டத்தில் பலர் கூற கேட்கின்றோம். தசைகளின் காரணத்தினால் ஏற்படும் வலி சில பயிற்சிகள், சிறிது ஓய்வு இவற்றின் மூலம் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பல பிரச்சினைகளைக் கூறும் அறிகுறிகளாக இருக்கலாம். ஆகவே இதில் சற்று கவனம் தேவை.
* மூட்டு வலி.
* எலும்புகளின் முறையின்மை அமைப்பு போன்றவைகளும் முதுகுவலியின் அறிகுறிகளாக இருக்க முடியும்.
* சிறுநீர் பை கீழ் வயிற்றில் அமைந்துள்ளது. சிறுநீர் வெளிப் போக்கு, கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, கீழ் முதுகு வலி, கால், உள் தொடை, பாதம் இவற்றில் உணர்வில்லாதது போல் இருப்பது எல்லாம் அவசர சிகிச்சை தேவைப்படுபவை ஆகும்.
* தூக்கத்தில் திடீரென ஏற்படும் முதுகுவலி கோணல் மாணலாக படுப்பதன் காரணமாக இருக்கலாம். பிறகு சரி செய்து கொண்டும் வலி அதிகமாக இருப்பின் மருத்துவ கவனம் தேவை.
* பொதுவான முதுகுவலி, நெஞ்சில் ஒரு அழுத்தம், கழுத்து, தாடை, தோள் பட்டை இவற்றில் வலி.
* வியர்வை அதிகம்.
* வயிற்றுப் பிரட்டல்.
* மூச்சு விடுவதில் சிரமம்.
* சோர்வு போன்றவை மாரடைப்பின் வெளிப்பாடுகளாக இருக்கலாம். வயது கூடக் கூட காலையில் எழுந்திருக்கும் பொழுது உடல் சற்று கடினமாகவும், வலியுடனும் இருக்கும். இது சற்று நீண்ட நேரம் கூட இருக்கலாம். இது ஒருவித வீக்கத்தின் பாதிப்பு. ஆரம்ப நிலையிலேயே இதற்கு நல்ல கவனம் கொடுத்தால் பாதிப்புகள் வெகுவாய் குறையும்.
* திடீரென உயரம் குறைந்தது போல் இருத்தல்.
* அதிக கை, கால் அசைவுகள் இயலாமை.
* நடப்பதும், நிற்பதும் வலியினை அதிகப்படுத்துவது.
* திடீரென அதிக முதுகு வலி போன்றவை உடனடியாக மருத்துவ கவனம் தேவை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.