பெண்களின் ஹார்மோன்களை சீராக்க உதவும் நல்ல பழக்கங்கள்… உணவுகள்…
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது. குறிப்பாக 10.30 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறப்பு.
பொரித்த மீன்களை உண்ண கூடாது. வறுத்த, வேக வைத்த மீன்களை சாப்பிடலாம்.
நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து உள்ளது.
கோழி முட்டையை வாரம் 5 முறை சாப்பிடலாம். முடிந்த அளவு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுங்கள்.
துளசி தண்ணீர், துளசி டீ ஆகியவற்றை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். ஹார்மோன் பிரச்சனை மெல்ல சீராகும். அஷ்வகந்தா எனும் மூலிகையை உங்களது ஹெல்த் மிக்ஸ் பவுடரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மாலை, காலை நேர சத்து மாவு கஞ்சியாக செய்து குடிக்கலாம். ஹார்மோன் பிரச்சனை சீராகும்.
மூச்சு பயிற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். ஹார்மோன்கள் சிறப்பாக இயங்கும். லாவண்டர் எண்ணெய், தைம் எண்ணெய், சந்தன எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை தினமும் ஒரு எண்ணெய் என வீட்டில் 5 சொட்டு அளவு தெளிக்கலாம். இதை சுவாசிக்கையில் மனதுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சீராகும்.
சூரியனிடமிருந்து விட்டமின் டி சத்துகளைப் பெற வேண்டும். நாள்தோறும் சூரிய வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தயிர், மோர், யோகர்ட் போன்ற ப்ரொபயாட்டிக் உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நலம் பெறும். இன்சுலின், கிரெலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும்.
கர்ப்பத்தடைக்காக மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தால் அதைநிறுத்தி விடுங்கள். இவற்றால் ஹார்மோன்கள் பாதிக்கும். பாதுகாப்பான கர்ப்பத்தடைகளைப் பயன்படுத்தலாம். அதில், காண்டம் பாதுகாப்பானது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுகளை அவசியம் தவிருங்கள்.