ஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா? இத ட்ரை பண்ணுங்க
சாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அதுவும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, KGF யாஷ், நம்மூரு ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மீதான மோகமும் காதலும் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் தான் மீசையையே விரும்பாத பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் போன்றவர்கள் தற்போது அழகழகான தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் அது போன்று தாடியை வைப்பதும் பராமரிப்பதும் அவ்வளவு லேசான விஷயம் இல்ல. மரபு வழி வளர்ச்சி என்பதை தாண்டி ஆரோக்கியமான தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதுதான்
ஈரப்பசையை தக்கவைப்பது முகச்சருமம் சுலபமாக ஈரப்பசையை இழந்து கடினமாகி விடும், தாடி வளர்க்க இந்த ஈரப்பசை முக்கிய காரணி, எனவே மாய்ஸ்ச்சரைசர் அல்லது தாடிக்கென்றே விற்கப்படும் பியர்டு ஆயில் (beard oil) மூலம் கடினமான சருமப்பகுதிகளில், குறிப்பாக மீசைக்கு கீழே உள்ள பகுதியில், ஈரப்பசையை தக்க வைக்க வேண்டும். .
சுத்தமாக வைப்பது தாடி கடினமாக (rough) இருப்பதை தவிர்க்கவும் நமைக்காமல் இருக்கவும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
சுத்தமாக வைப்பது தாடி கடினமாக (rough) இருப்பதை தவிர்க்கவும் நமைக்காமல் இருக்கவும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
மெழுகு பயன்படுத்துங்கள் மீசையை மென்மையாக்கவும் நீங்கள் விரும்பிய வடிவத்திற்கு வளைக்கவும் மெழுகு (wax) பயன்படுத்துவது அவசியம். அத்துடன் மீசைக்கு ஒரு பிரகாசத்தையும் இது கொடுக்கும்
சிக்கு வராமல் தடுக்க சீப்பு உபயோகியுங்கள் சீப்பு உபயோகிப்பதன் மூலம் தாடி மீசையில் சிக்கு வராமல் பார்த்துக்கொள்வது அவசியம். அத்துடன் சீப்பு உபயோகிப்பதால் தாடியில் படியும் அதீத எண்ணெயை தடுப்பதுடன் டேன்ட்ரஃப் வருவதையும் தடுக்கலாம்.
ஒழுங்கு படுத்துங்கள் தாடியை அடிக்கடி கத்தரிப்பது மூலம் அதற்கு சரியான வடிவம் கிடைக்கும். கட்டுப்பாடற்று வளரும் தாடி மீசை உங்களது தோற்றத்தை கெடுக்கும்.