ஆரோக்கியம்

இனிப்பில் இருக்கும் அபாயம்

இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை சிறுவர்கள் அப்படியே அள்ளி சாப்பிடுகிறார்கள்.

குறிப்பாக, வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம். கரும்பில் இருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாற்றில் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட்டை லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவீதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள். 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருட்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. மறுபடியும் சல்பர்-டை-ஆக்சைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. இப்படி தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகிறது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரை, கருப்புக்கட்டி ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker