சமையல் குறிப்புகள்
பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பாகற்காய் – 5
- நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
- மிளகாய்தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- மாங்காய் பவுடர் – அரை ஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சோம்பு – அரை ஸ்பூன்
- நறுக்கிய மாங்காய் – சிறிதளவு
- கடலை எண்ணெய் – தேவைக்கு
செய்முறை :
- பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
- பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
- அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
- சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.