சமையல் குறிப்புகள்
சூப்பரான டிபன் சேமியா உப்புமா
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- சேமியா – 2 கப்,
- பெரிய வெங்காயம் – 2,
- கறிவேப்பிலை – சிறிது,
- கொத்தமல்லித்தழை – சிறிது,
- உப்பு – தேவைக்கு.
தாளிக்க :
- கடுகு – 1 டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
- இஞ்சி – 1 துண்டு,
- பச்சை மிளகாய் – 4,
- எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
- சேமியாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துகொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
- அதில் வறுத்த சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- சூடான சேமியா உப்புமா ரெடி.