சமையல் குறிப்புகள்
வெஜிடபிள் எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதத்தில் காய்கறிகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பச்சரிசி – 1 கப்,
- எலுமிச்சம் பழம் – 2,
- கேரட் – 1,
- பீன்ஸ் – 15,
- பட்டாணி – அரை கப்,
- இஞ்சி – 1 துண்டு,
- பச்சை மிளகாய் – 3,
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
- பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- கடுகு – அரை டீஸ்பூன்,
- உளுந்து – 1 டீஸ்பூன்,
- கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
- முந்திரி – 10,
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
- உப்பு – தேவைக்கு.
செய்முறை :
- அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.
- எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
- காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
- இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.
- சூப்பரான காய்கறி எலுமிச்சை சாதம் ரெடி.