மூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்
உடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூளையினை பாதிக்கும் சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
மூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்: எதனையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள், சிலர் மிக குறைவாக பேசுவார்கள், தான் நினைப்பதையோ, தன் உணர்ச்சிகளையோ வெளியில் பேசினால் மட்டுமே நன்கு சிந்திக்கவும், இயற்கையான முறையில் செயல்படுத்தவும் முடியும். அதுவும் நமக்கு நெருக்கமானவர், நம்பகமானவர்களிடம் மட்டுமே இவ்வாறு நம்மால் பேச முடியும். ஆனால் சிலர் தனக்குத்தானே ஒரு சிறை தண்டனை விதித்துக்கொண்டது போல் எதனையும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து புழுங்குவார்கள். இத்தகையோர் காலப்போக்கில் மூளையின் செயல்திறன், சிந்திக்கும் திறன் இவை மிகவும் குறையப் பெறுவார்கள்.
ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை பொருந்தாது. இங்கு கூறப்பட்டுள்ளவை சாதாரண வாழ்க்கை முறையில் இருப்பவர்களைப்பற்றி மட்டுமே. ஆக முதல் பத்தியில் கூறப்பட்டுள்ளதுபோல் அனைத்தையும் மனதில் பூட்டி வைத்து புழுங்குபவர்கள் உடனடியாக தனக்கு நம்பகமான ஒருவரிடமாவது பேசி தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது மன உளைச்சலையும், மூளை பாதிப்பினையும் தவிர்க்கும்.
* உடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர்.
* மனச்சோர்வு, மன உளைச்சல் இருப்பவர்களுக்கு அதிக அழிவுப்பூர்வமான சிந்தனைகளே ஏற்படும். இதனால் அவர் களுக்கு மூளை செயல்திறன் பாதிக்கப்படும். ஆகவே இத்தகையோர் தியானம், யோகா, ரிலாக்ஸ் முறைகளை பயில வேண்டும்.
* சிலருக்கு போர்வையால் முகத்தை மூடிக்கொண்டால் தான் தூங்கவே முடியும். இவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு குறைவதால் காலப் போக்கில் மறதி நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
* காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தேவையான சத்துக்கள் மூளைக்கு கிடைக்காத காரணத்தினால் மூளையின் செயல்பாட்டுத்திறன் தேய்கின்றது.
* முறையான அளவு தூக்கம் இல்லாதவர்களுக்கு நீண்ட காலம் இவ்வாறு தொடரும் பொழுது மூளையின் செல்கள் இறக்கின்றன. எனவே அன்றாடம் 8-10 மணிநேரம் தூங்குங்கள்.
* புகை பிடித்தல்:- புகைபிடிப்பது நடுமூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நடை, செயல்கள் இவற்றில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.
* உடலில் நீர்சத்து குறையும் பொழுது மூளையின் செல்கள் இறக்கின்றன. எனவே அன்றாடம் 8 கிளாஸ் நீர் அருந்துங்கள்.
* அதிக சர்க்கரை உட்கொள்ளுதல்:- அதிக உணவு உண்டு மிகுந்த எடை யுடன் இருப்பவர் களுக்கு தேவையான சத்து கிடைப்பதில்லை. இவர்களுக்கு மறதி பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.
* அதிக சர்க்கரை உடல் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை குறைக்கின்றது. இதனால் மூளையின் செயல் திறன்களில் பாதிப்பு ஏற்படும். எனவே சர்க்கரை உட்கொள்வதினைத் தவிருங்கள்.