சமையல் குறிப்புகள்
தர்ப்பூசணி மசாலா ஜூஸ்
நீர்சத்து நிறைந்த தர்ப்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் சூட்டை தணிக்கலாம். இன்று தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- தர்ப்பூசணி – 1
- இஞ்சி – 2 துண்டு
- புதினா – சிறிதளவு
- எலுமிச்சை பழம் – 1 (சாறு பிழியவும்)
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- மிளகு தூள் – கால் டீஸ்பூன்
- பனங்கற்கண்டு – தேவையான அளவு
- உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை :
- மிக்சியில் இஞ்சியையும், புதினாவையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதுபோல் தர்ப்பூசணியின் தசை பகுதியை வெட்டி எடுத்து கூழாக அரைக்கவும்.
- அதனுடன் இஞ்சி, புதினா விழுதை சேர்த்துக்கொள்ளவும்.
- மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றையும் கலந்து பரிமாறவும்.
- சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் ரெடி.