சமையல் குறிப்புகள்

தித்திப்பான ஷீர் குர்மா

வீட்டில் சுவையான இனிப்பு செய்ய விரும்பினால் ஷீர் குர்மா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • பால் – 1 லிட்டர்,
 • சேமியா – 1 கப்,
 • நெய் – 2 ஸ்பூன்,
 • முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை – தேவையான அளவு,
 • ஏலக்காய் பொடி – ஒரு சீட்டிகை,
 • சர்க்கரை – 1/2 கப்,
 • ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்,
 • குங்குமப் பூ – 1/4 ஸ்பூன்

செய்முறை :

 • நெய்யை நன்கு காய வைத்து நட்ஸை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
 • சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும்.
 • அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.
 • சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
 • பின் அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
 • சுவையான ஷீர் குர்மா தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker