சமையல் குறிப்புகள்
மட்டன் கஞ்சி செய்வது எப்படி?
மட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- அரிசி – 2 கப்
- வறுத்த சிறு பருப்பு – 1 கப்
- மட்டன் – அரை கிலோ
- பெ.வெங்காயம் – 3
- கேரட் – 4
- உருளைக்கிழங்கு – 2
- பட்டாணி – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மசாலா தூள் – தேவைக்கு
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- தக்காளி – 4
- பட்டை, ஏலக்காய் – சிறிதளவு
- இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
செய்முறை:
- பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.
- பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
- சுவையான மட்டன் கஞ்சி ரெடி.