சமையல் குறிப்புகள்

சத்தான சுவையான காராமணி ரைஸ்

குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • அரிசி – ஒன்றரை கப்,
 • காராமணி – அரை கப்,
 • வெங்காயம் – 1 ,
 • தக்காளி – 1,
 • சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்,
 • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
 • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
 • காய்ந்த மிளகாய் – 2,
 • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
 • கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
 • எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,
 • எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
 • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.
 • சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 • தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
 • அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.
 • கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker