Summer Trip 2019: இயற்கையை நேசிப்பவர்களின் உன்னத காதலன் – ஜிரோ!
Summer Trip 2019: ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இங்கு திருவிழாக்கோலங்களால் அமர்க்களப்பட்டிருக்கும்.
Summer Trip 2019: ஜிரோ அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மிகப்பழமையான, அதேநேரம் இயற்கை எழில் சூழ்ந்த மலை நகரம்.
நெல் வயல்கள், பைன் மரங்களால் சூழ்ந்த வனப்பகுதி, டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு எனும் சிறு குன்று, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம், டரீன் மீன் பண்ணை உள்ளிட்டவைகள் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத்தளங்கள் ஆகும்.
இங்கு வாழும் பழங்குடியினர் அபடணி பழங்குடியினர் என்றழைக்கப்படுகின்றனர். இவர் மற்ற பழங்குடியினரை போல நாடோடிகளாக அல்லாமல், இப்பகுதியிலேயே நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.
முருங் திருவிழா, மியாகோ திருவிழா, ட்ரீ திருவிழா என ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இங்கு திருவிழாக்கோலங்களால் அமர்க்களப்பட்டிருக்கும்.
கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்திலிருக்கும் இந்த நகரத்தில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள், இயற்கையை நேசிப்பவர்களுக்கு இனிய வரப்பிரசாத இடமாக விளங்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.