சமையல் குறிப்புகள்
உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை
கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு – 1/2 கப்
- கோதுமை மாவு – 1/4 கப்
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் அல்லது மோர் – தேவையான அளவு
செய்முறை :
- ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
- சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி!!!