அனைத்து பெண்களுக்குமே தங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகள் நபருக்கு நபர் மாறினாலும், எதிர்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். பெரும்பாலான பெண்கள் ஒரு சிறந்த கணவருக்கென மனதில் சில தகுதிகளை வைத்திருப்பார்கள். அதில் அடிப்படைத் தகுதி ரொமான்டிக்காக இருக்க வேண்டும்.
இதுதவிர்த்து மேலும் சில குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சிறந்த கணவரின் குணங்களை தனது சொந்த வழியில் புரிந்து கொள்ள வேண்டும். பல பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் எதிர்பார்க்கும் சில அடிப்படை தகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த கணவராக இருக்க பெண்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொருளாதாரரீதியாக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்
தனக்கு வரப்போகிற கணவர் பொருளாதாரரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. நீங்கள் நிதிரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளும்வரை நீங்கள் எதிர்பார்க்கும் திருமணம் நடக்காது.
தலைமைத்துவம்
அவர் நம்பகமானவர், முன்முயற்சி கொண்டவர், உங்கள் குடும்பத்தை சரியான பாதையில் வழிநடத்துவது என்பதை அவர் அறிவார். நீங்கள் அவருடன் இருக்கும்போது, நீங்கள் வாழ்க்கையில் எதையும் இழக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சமைக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்
ஆண்களின் சமையல் திறன் அவர்களை பெண்களால் தவிர்க்க முடியாதவர்களாக மாற்றுகிறது. மற்ற திறன்களை விட சமையல் திறன் பெண்களை அதிகம் கவர்கிறது.
அம்மா பிள்ளையாக இருக்கக்கூடாது
அன்பான அம்மா இருப்பது எப்போதுமே பெண்களுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. உங்களுக்கு அன்பான தாய் இருந்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். மறந்து விடாதீர்கள் உங்கள் மனைவி மற்றும் தாய் இருவரும் பெண்கள், எனவே அவர்களில் ஒருவர் உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.
முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்
நானோ செகண்டில் மனைவி என்ன விரும்புகிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய அடுத்த மனநிலை மாறும் போது நீங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
சாரி சொல்ல ரெடியாக இருக்க வேண்டும்
ஒரு ஆண் எப்போதும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்க வேண்டும். தங்கள் மீது தவறு இல்லாமல் இருந்தாலும் மன்னிப்பு கேட்க தயாராக வேண்டும். ஏனெனில் பெண்களின் அகராதியில் அவர்கள் எப்பொழுதும் தவறே செய்யமாட்டார்கள்.
நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்
உங்களின் நகைச்சுவை உணர்வு உங்களை அவர்கள் புரிந்து கொள்ள உதவும் ஒன்றாகும். பெண்களை ஈர்க்கும் முக்கியமான குணங்களில் இதுவும் ஒன்றாகும், ஆனால் தவறான நகைச்சுவைகளை பொதுவெளியில் எப்போதும் கூறாதீர்கள்.
நல்ல அப்பாவாக இருக்க வேண்டும்
குழந்தைகளுடன் விளையாடுவது மட்டும் ஒருவரை நல்ல கணவராக மாற்றாது. டயப்பர்களை எவ்வாறு மாற்றுவது என்று தெரிந்துகொள்வது, குழந்தை அழும்போது இரவில் விழித்திருப்பது, தாலாட்டுப் பாடுவது போன்ற தந்தையாக இருப்பதற்குத் தேவையான திறமை உங்களிடம் இருக்க வேண்டும்.
பாதுகாப்பானவராக இருக்க வேண்டும்
பொஸசிவ் இருக்கக்கூடாது இதன் அர்த்தம் என்னவெனில் வெளியிடங்களில் யாரேனும் மோசமாக நடந்து கொண்டால் அவரை பாதுகாப்பவராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நண்பர்களுடன் பேசும்போது அதைநினைத்து கோபப்படுவராக இருக்கக்கூடாது.
குடும்பத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும்
பெண்கள் தனக்கு மட்டுமல்ல தனது குடும்பத்தினருக்கும் உரிய மரியாதையை எப்போதும் தங்கள் கணவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். எனவே உங்கள் மனைவியின் குடும்பத்தை எப்போதும் மரியாதை குறைவாக நடத்தாதீர்கள்.