புதியவைவீடு-தோட்டம்

உங்க டாய்லெட் சுத்தமாத்தான் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

சுத்தமான கழிப்பறை என்பது ஆடம்பரத்தை விட முக்கியமான ஒன்று; இது அத்திவாசியமானது; மற்றும் இது முழுமையாக கடைபிடிக்க வேண்டியதும் கூட; கழிப்பறை சுத்தம் செய்ய தேய்வையானவை சில க்ளீனர்கள் சிறந்த டாய்லெட் பிரஷ் சிறிதளவு கிருமிநாசினி நல்ல மனநிலை மற்றும் உங்கள் விடுமுறை நாளின் சில மணித்துளிகள்.

நீங்கள் உங்கள் கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதாய் ஒரு மாயையை உருவாகியுள்ள போதும் அங்கு சில்லியன்(zillion) கணக்கில் பிளவுகள் மற்றும் விரிசல்களில் பல நுண்ணிய கிருமிகள் பாக்டீரியாக்கள் உங்களை தாக்குவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

அவை டாய்லெட் பிரஷ்ஷில் கழிப்பறை விளிம்பிற்கு கீழ் கழிப்பறைக்கு பின் மற்றும் கழிப்பறை இருக்கை மீது படிந்திருக்கலாம். நீங்கள் சுத்தம் செய்ததாக நினைத்த கழிப்பறையில் கற்பனை செய்ய முடியாத அளவில் மாசுக்களும் கிருமிகளும் இருக்கின்றன.

அசுத்தமான கழிப்பறை இருப்பதை போலவே நீங்கள் கற்பனை செய்தாலொழிய இந்த கிருமிகள் மாசுக்களை சுத்தப்படுத்த முடியாது.

எப்படியாயினும் சரி செய்ய முடியாதது ஒன்றுமில்லை மேலும் இவையெல்லாம் சரியான முறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் மட்டுமே சுத்தமாகும்.

உங்களுக்கு தெரியுமா குளியலறை கழிப்பறையை விட டாய்லெட் பிரஷ்ஷில் தான் அதிக கிருமிகள் இருக்கிறது. சிலர் கழிப்பறையை சுத்தம் செய்வதில் காட்டும் அக்கறையை பிரஷை கழுவுவதால் காட்டுவதில்லை இதன் பலனாக பிரஷ்ஷில் உள்ள நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்து எல்லா வகை பாக்டீரியா தொற்றுக்களையும் உருவாக்குகிறது.

இதை ஒழிக்க உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்த பின் டாய்லெட் கிளீனிங் ப்ரஷையும் கிருமிநாசினி அல்லது ப்ளீச்சிங் திரவத்தில் ஒரு இரவு ஊறவைத்து நன்கு கழுவவும்.

இப்போது நீங்கள் மிகச்சுத்தமான கிளீனிங் பிரஷை பெற்றுவிட்டீர்கள், இதைக்கொண்டு நீங்கள் அடுத்த முறை உங்கள் கழிப்பறையை இன்னும் அழகாக சுத்தம் செய்யலாம்.

கழிவறைக்கு பின்னாலும் சுவர்பகுதியையும் சுத்தம் செய்வதென்பது மிகக்கடினமான ஒன்று, அதற்கு தேர்ந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை தெரிந்திருக்க வேண்டும்.

இதை நிர்வகிக்கும் தந்திரம் இதோ உங்களுக்காக – இவ்விடங்களில் நீங்கள் கிருமிநாசினி தெளிப்பை(disinfectant spray) துடைப்பானுக்கு பதிலாக உபயோகித்தல் சிரமம் குறையும். மேலும் சுத்தமான கழிப்பறைக்கு சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் –

கிருமிநாசினி(disinfectant)

கிருமிநாசினி திரவத்தை தெளித்து ஒரு இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். ஏனெனில் சில ஆட்கொல்லிகள் எளிதில் ஒழியாது, பிடிவாதமாக தங்கியிருக்கும் அவற்றை அழிக்க இந்த கிருமிநாசினி தெளிப்பு உதவும்.

இதற்கு மாற்றாக துடைப்பானை க்ளெனிங் சொலுஷனில் அல்லது கிருமிநாசினியில் ஊறவைத்து, துடைப்பனின் ஒரு பகுதியை கையில் பிடித்துக்கொண்டு, அதை கழிவறையை சுற்றி விரித்து விடவும், பின்னர் அதை நன்கு துவைத்து சுத்தப்படுத்தவும்.

கழிப்பறை மிகச்சுத்தமாக பளபளக்கும். கழிவறை விளிம்புகளில் கசடுகள் குழுமியிருக்கும் மேலும் இதை சுத்தப்படுத்துவதும் கடினம். கிருமிநாசிகள் கொண்டு இருவேறு வழிகளில் கழிப்பறை விளிம்புகளை நீங்கள் சுத்தம் செய்வது எளிதே;

பிறகு நீங்கள் சுத்தப்படுத்தியதாய் நம்பி மொத்தத்தையும் மறந்து விடுவீர்கள்; ஆனால் உண்மையென்னவெனில் கழிப்பறை விளிம்புகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் அது பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் இனப்பெருக்கம் செய்து விடும் மேலும் அது மிக மிக ஆபத்தானதாகி விடும்.

பிரஷ்

உங்கள் கழிவறை மற்றும் கழிவறை விளிம்புகளுக்கு ஏற்றார் போல் பிரஷை தேர்ந்தெடுங்கள். உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்கையில் கழிப்பறை விளிம்புகளில் சுத்தத்திற்கு அதிக கவனம் செலுத்துங்கள் மேலும் அதை சுத்தப்படுத்த கொஞ்சம் அதிகப்படியான எல்போ கிரீஸை பயன்படுத்துங்கள்.

மிக நுணுக்கமான வேலை என்பதால் கைகளுக்கு பாதுகாப்பு உறை போட மறவாதீர்கள். இன்னும் சுத்தப்படுத்துவது கடினமாக இருப்பின் இவைகளை விடுத்து பழைய டூத் பிரஷை கொண்டு நன்றாக சுத்தப்படுத்துங்கள்.

மிகச்சுத்தமான கழிப்பறைக்கு, பொருத்தமான கழிப்பறை சுத்தப்படுத்திடும் கருவிகள் மற்றும் அதற்கேற்ற துணை கருவிகளும் அத்தியாவசியம்.

வெள்ளை வினிகர்

ஃப்ளஷ் டேங்கில் (flush tank) வெள்ளை வினிகரை ஊற்றுவதால் ஒவ்வொரு ஃப்ளஷின் போதும் புதிய வாசனை வருவதோடில்லாமல் இது உங்கள் சானிடரி வேர் (sanitary ware) மீது எந்த வித கடின நீரும் தேங்காமல் பார்த்துக்கொள்கிறது.

வினிகர் ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் கரை நீக்கும் நண்பன், மேலும் இது 100% நச்சுத்தன்மையற்றது. அதனால் இதை உங்கள் கழிவறை வடிகால்களில் எப்போதும் ஃப்ளஷ் செய்வதர்காக ஊற்றலாம்.

நீங்கள் தினமும் வினிகரை ஃப்ளஷ் டேங்கில் ஊற்றினால் அது மிக குறைந்த கறைகளை மட்டுமே அந்த வார இறுதியில் நீங்கள் சுத்தம் செய்வதற்கு விட்டுவைக்கும். நீங்கள் கொஞ்சம் சிட்ரோனெல்லா அல்லது யூகலிப்டஸ் எண்ணையை வினிகருடன் கலந்து ஃப்ளஷ் டேங்கில் ஊற்றினால் ஒவ்வொரு பிளஷின் போதும் நல்ல வாசனை நீடித்திருக்கும்.

ஃப்ளஷ்

உங்கள் கழிவறையில் சுத்தமாக வைக்க வேண்டிய முக்கியமான் ஒன்று ஃப்ளஷ் டேங்க். ஃப்ளஷ் செய்வது மிக முக்கியம். நன்றாக ஃப்ளஷ் செய்துள்ளீர்களா என்று பார்ப்பதை விட கழிவுகள் சரியாக நீக்கப்படும் அளவிற்கு சுத்தமாக ஃப்ளஷ் செய்துள்ளீர்களா என்று பார்க்கவும்.

எந்த கசடுகளை ஈக்களும் வந்து தாங்காத அளவு சுத்தமாக இருக்க வேண்டும். மூடிக்கு கீழ் வரை சரியான முறையில் ஃப்ளஷ் செய்யுங்கள். உங்களுக்கு தெரியுமா? உங்கள் கழிப்பறை சிறு மலதுகள்களை நீங்கள் ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும்போதும் ஸ்பிரே செய்கிறது.

ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்னவென்றால் மிகச்சிறிய மலத்துகள்கள் டூத் பிரஷ்களில் தங்கியிருக்கின்றன மேலும் அது எப்படி வந்தது என்றும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வது யாரென்றும் அறியமுடியவில்லை.

உண்மையாக நடந்தது என்னவெனில் கழிவரைக்கிண்ணம் சிறு மலத்துகள்களை ஒவ்வொரு ஃப்ளஷின் போதும் ஸ்பிரே செய்திருக்கின்றது.. அதனால் இன்றே கழிப்பறை சுத்தம் செய்து விடுங்கள், அது மிக மிக அவசரமும் அவசியமுமான ஒன்று.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker