இந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா
கடன் வாங்குவது என்பது இந்த உலகத்தில் அனைவருக்குமே இருக்கும் பழக்கமாகும். தனிநபர் முதல் உலகநாடுகள் வரை அனைவருமே கடன் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். கடன் வாங்குவது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை, ஆனால் ஈன பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நமது சாஸ்திங்களின் படி சில பொருட்களை கடன் வாங்குவது நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்களை பிறரிடம் இருந்து வாங்குவது அல்லது அவர்களுக்கு தெரியாமல் எடுப்பது கெட்ட நேரத்தை உங்களை நோக்கி அழைத்துவரும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை கடன் வாங்கக்கூடாது என்றார் பார்க்கலாம்.
கடிகாரம்
மற்றவர்களின் கடிகாரத்தை ஒருபோதும் இரவல் வாங்கி கட்டாதீர்கள். ஏனெனில் அடுத்தவர்களின் கடிகாரத்தை கடன் வாங்கி கட்டுவது உங்கள் வாழ்க்கையில் வறுமையையும், தோல்வியையும் ஏற்படுத்தும்.
கைக்குட்டை
மற்றவர்களின் கைக்குட்டையை பயன்படுத்துவது உங்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை மட்டும் கூட்டிவராது, கெட்ட நேரத்தையும் சேர்த்துதான் கூட்டிவரும். மேலும் இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பேனா
ஒருவரிடம் பேனா வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்கா விட்டால் அது உங்களின் வாழ்க்கையில் வறுமையையும், அவமானத்தையும் ஏற்படுத்தும்.
உடைகள்
நண்பர்களுக்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது சிறந்த யோசனையாகும். ஆனால் இது பொருளாதார பிரச்சினைகளை உண்டாக்கும். உங்கள் குடும்பத்திற்குள் கூட உடையை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
சோப்
குளிக்கும் சோப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்கும்.இதனை ஒருபோதும் ஒருவருக்கு மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி இதனை காயவைத்து விடுவது நல்லது.
துண்டு
ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் எளிதில் பரவ முக்கியமான காரணம் துண்டுகளை பகிர்ந்து கொள்ள உதவாது. துண்டுகளை அடிக்கடி துவைத்து விடுவது நல்லது, இதனை சூரிய ஒளியில் மட்டுமே காயவைக்க வேண்டும்.
நகவெட்டி
நமது நகங்களில் அதிகம் பூஞ்சைகள் இருக்கும்,.நமது நகங்களை அடிக்கடி வெட்ட வேண்டியது அவசியம். இந்த நகவெட்டியை ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை ஒருபோதும் வேறு ஒருவருக்கு கொடுக்கக்கூடாது.
காதணிகள்
காதணிகளை பகிர்ந்து கொள்வது பாதிப்பில்லாததாக தோன்றலாம். ஆனால் காதணிகளை பகிர்ந்து கொள்வது இரதம் தொடர்பான நோய்களை ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரப்பக்கூடும்.
ஹெட்போன்ஸ்
ஆய்வுகளின் படி ஹெட்போன்களை பகிர்ந்து கொள்வது காதுகளில் அதிக பாக்டீரியாக்களை பரப்பும். இதனை பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவருக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும்.