சமையல் குறிப்புகள்
சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் போண்டா
தேவையான பொருட்கள் :
- தட்டை அவல் – ஒரு கப்,
- உருளைக்கிழங்கு – ஒன்று,
- பச்சை மிளகாய் – 3,
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
- தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
- உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.
செய்முறை :
- அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.
- இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.
- சூப்பரான அவல் போண்டா ரெடி