குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்
துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
துணையின் தகாத உறவு தெரிய வருவதும், அதை எதிர்கொள்வதும் படு பயங்கரமான அனுபவம். உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிற அனுபவமும் கூட துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அது உண்மையா, பொய்யா என்கிற மனப்போராட்டத்துக்கு விடை காண்பதே மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.
சிலரது தகாத உறவானது ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடும். அதை உறுதிப்படுத்துகிற ஆதாரங்களும் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த உறவானது துணைக்குத் தெரியாமலே ரகசியமாகத் தொடரும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அது தெரியாமல் வைத்திருக்கப்படுகிற குடும்பங்களும் உள்ளன. அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகிற திடீர் நடத்தை மாறுபாடுகள், அவரது பழக்க வழக்கங்களில் தென்படுகிற திடீர் மாற்றங்கள் மற்றும் உறவுகளிடமிருந்தும், விட்டுச் சூழலில் இருந்தும் தனித்து விலகி இருக்கிற மனப்பான்மை போன்றவையே தகாத உறவுக்கான முதல் அறிகுறிகளாக அமையும்.
கணவன் – மனைவி இருவருமே பிஸியான வேலையில் இருப்பார்கள் என்றாலோ, வேலை அல்லது பிசினஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலோ ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை இன்னோருவரால் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
ஒரு சில பெண்களுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான நேரமும் கவனிப்பும் குறைந்து, மொத்த கவனமும் குழந்தைகள் பக்கம் திரும்பும். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொறுப்பில், கணவரின் மீதான கவனம் சற்றே பின்னுக்குப் போவதும் இயல்புதான். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களிலும் அவர்களால் கணவருக்குத் திடீரென முளைத்த தேவையற்ற உறவு பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போகலாம்.
பல நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டார், நண்பர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என மூன்றாம் நபர்கள் மூலமும் துணையின் தகாத உறவு தெரிய வரும். இதெல்லாம் இருந்தாலும் துணையின் தப்பான உறவைக் காட்டிக் கொடுப்பதில் கணவரின் பேன்ட், ஷர்ட் பாக்கெட்டுகளுக்கும், மனைவியின் ஹேண்ட்பேகுக்குமே முதலிடம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இ மெயில், அழிக்கப்படாத செல்போன் எஸ்.எம்.எஸ்.., அடிக்கடி ஒரே எண்ணிலிருந்து வந்த போன தொலைபேசி எண்கள் போன்றவையும் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சிகளாக அமைகின்ற