சமையல் குறிப்புகள்
ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு
தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு
தேவையான பொருட்கள் :
- எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ
- தட்டிய பூண்டு – 30 கிராம்
- வெங்காயம் – 50 கிராம்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 3
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- சீரகம் – அரை டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.