சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்
குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – ஒரு கப்,
- நூடுல்ஸ் – ஒரு கப்,
- பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப்,
- பால் – 2 டீஸ்பூன்,
- சீரகத்தூள் – கால் டீஸ்பூன்,
- கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
- தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.
பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.
தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் ரெடி.