சூப்பரான நண்டு ரசம் செய்வது எப்படி?
சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- நண்டு – 250 கிராம்.
- கொத்தமல்லி – சிறிதளவு
- அரைக்க…
- சாம்பார் வெங்காயம் – 1,
- தக்காளி – 2,
- பச்சைமிளகாய் – 3,
- பூண்டு – 4 பல்,
- இஞ்சி – சிறிது,
- நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
- உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
கடுகு, மிளகு, சீரகம், சோம்பு – தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிது.
செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.
மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.
சூப்பரான நண்டு ரசம் ரெடி.