21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
பொதுவாக நாள்ப்பட்ட நோய்களுக்கு இளநீர் மருந்தாக செயற்படுகிறது. கோடைக்காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக ரோட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் இளநீரில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இளநீர் ஆண்களுக்கு நீரேற்றம், தசை மீட்பு, இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சீராக்கம் உள்ளிட்ட பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருந்தாக செயற்படுகிறது. சிலருக்கு ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருக்கும்.
அப்படியான சமயங்களில் இளநீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை கொடுத்து புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.

இது போன்று இளநீர் தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?
1. இளநீர் அடிக்கடி குடிக்கும் பொழுது எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்குள் சென்று உடலை நீரேற்றமாக வைத்தக் கொள்ளும். இது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் தரும்.
2. உடற்பயிற்சி செய்த பின்னர் சிலர் இளநீர் குடிப்பார்கள். இப்படி குடிப்பதால் தசைகள் மீட்சியடையும்.

3.இதயம் தொடர்பான நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொட்டாசியம் சத்து இளநீரில் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தங்களை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும
4. இளநீரில் உள்ள லாக்டிக் சத்துக்கள் செரிமானத்தை சீர்ப்படுத்தி, சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் சீராக செரிமானமடையச் செய்யும். சிலருக்கு வயிற்றில் உப்புசம் அதிகமானால் அதற்கு கூட இளநீர் குடிப்பார்கள்.

5. பருவ கால மாற்றங்களின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைவருக்கும் சளி இருமல் பிரச்சினைகள் வரும். இதனை தடுப்பதற்காகவும் இளநீர் குடிக்கலாம். ஏனெனின் இளநீரில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.



