ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பெண்களை குறிவைக்கும் தைராய்டு – காரணம் தெரியுமா?

பெண்களை குறிவைக்கும் தைராய்டு - காரணம் தெரியுமா?

கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.

இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.

மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker