ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
நாவல் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் நோய்களுக்கு குணம் கிடைக்கும்…?
நாவல் பழத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. மற்ற பழங்களை ஒப்பிடும்போது நாவல் பழம் ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் குறைந்த கலோரி உணவு. நாவல் பழத்தின் கலப்பின வகைகள் விதையற்றவையாகும், அதே சமயத்தில் இயற்கை நாவல் பழத்தில் விதைகள் உள்ளது.
நாவல் பழம் நீரிழிவுக்கான சிறந்த சிகிச்சை உணவாக உள்ளது. இதன் விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பதில் உதவுகிறது என்றும், நாவல் பழம் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாவல் மரத்தின் மரப்பட்டை நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அரை டீஸ்பூன் மரப்பட்டை தூள் மற்றும் ஒரு கரண்டி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகம் செயலிழப்பதை தடுக்க முடியும்.
நாவல் பழம் சாப்பிடுவது புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. நாவல் பழத்தில் பாலிபினால்களை, பைட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி அழிக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள ஆண்டோசியனின்கள், ஃபிளாவோனாய்டுகள், எலகாகித் அமிலம் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை உறுப்புகளில் புற்றுநோயைத் தடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கின்றன.
நாவல் பழத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன, இந்த பழத்தின் சாறு வாய் துர்நாற்றம் நீங்க உதவுகிறது. நாவல் பழ மரத்தின் பட்டையை எரித்து சாம்பல் ஆக்கி பற்கள் துலக்கினால் பற்கள் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
நோய் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.