மறதியினை குறைக்க சில பழக்கவழக்கங்கள்
* அன்றாடம் ஏதாவது படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். மூளைக்கு சவால்களை கொடுங்கள்.
* உங்களுக்கு காது கேளாமை இருப்பின் உடனடியாக அதனை சரி செய்யுங்கள். சில முதியவர்களுக்கு காது கேளாமையினை சரி செய்தவுடன் அவர்கள் சுறுசுறுப்பாய் நல்ல மூளைத் திறனோடு செயல்படுவார்கள்.
* 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதும் 6 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தூங்குவதும் மூளை செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும்.
* இருதயம் சீராய் இருத்தல், முறையான ரத்த அழுத்தம் இரண்டுமே ஆரோக்கியமான மூளைக்கு மிக அவசியம்.
* அதிக உடல் எடை, சதை கூடியவர்களுக்கு மறதி பாதிப்பு ஏற்படும். சரியான உடல் எடையினை வைத்திருங்கள்.
* புகை பிடிப்பவர்களின் மூளைத் திறன் மழுங்கி விடுகின்றது என பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
* அதிக சோகம், மனஉளைச்சல் இவை சுறுசுறுப்பான மூளையின் எதிரிகள்.
* அக்கம் பக்கத்தினரிடம் நட்போடு பழகுங்கள்.
* சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.
* காலையில் காபி, டீ குடியுங்கள். மதியம் 12 மணிக்கு மேல் வேண்டாம்.
* வானவில் நிறத்தில் காய்கறிகளை உண்ணுங்கள்.
* ஆயுர்வேத மசாஜ் முறை சிறந்ததே.
* வாய்விட்டு சிரியுங்கள்.
* பகலில் 10-20 நிமிட சாய்வு நாற்காலி தூக்கம் நல்லதே.
* சிறிதளவு பட்டை தூளினை உணவில் தூவிக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு தொட்டிகளுடன் தோட்டம் உருவாக்கலாமே.
இவையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மூளையும் சுறுசுறுப்பாய் இருப்பதனை நீங்களே உணருவீர்கள்.
யாருக்குத்தான் உடலில் அதிக எடையினை தூக்கிக் கொண்டு வாழ பிடிக்கும். வாழும் முறையில் சில மாற்றங்களே அதிக பலனை உடலுக்கு அளிக்கும்.
* அதிக நேரம் உட்கார்ந்தே நாளை செலவழிக்காதீர்கள். முடிந்த வரை வீட்டில் கூட நடந்த படியே இருங்கள்.
* சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம் என இன்றைய காலத்தில் அனைவரும் அறிவர். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் தான் முடியாமை ஏற்படுகின்றது. சிறு சிறு அளவிளான உணவினை அடிக்கடி உண்டு வந்தால் இதற்கு மிக நல்ல தீர்வு கிடைக்கும்.
* கண்டிப்பாய் 1½-2 லிட்டர் நீரினை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் குடியுங்கள்.