சமையல் குறிப்புகள்
சூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 10
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – அரை கப்
மஞ்சள் தூள், மிளகு தூள் – சிறிதளவு
சீரக தூள், தனியாத்தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
ரொட்டித்தூள் – சிறிதளவு
செய்முறை :
வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.