ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
மருத்துவ நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழம்
எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்-சி சத்தினை எளிதாகப் பெறமுடியும்.
எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.
எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.
எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கும், கல்லீரம் பலம் பெரும். எலுமிச்சை பழம் தாதுவை கெட்டிப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும். மேலும், உடலில் ஏற்படும் நமைச்சலை போக்கும்.
எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாலும் வலிக்கு இது சரியான தீர்வாக எலுமிச்சை சாறு இருக்கும்.
காபி அல்லது தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து பருகி வந்தால் தலைவலி குணமாகும். கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும்.