புதியவைவீடு-தோட்டம்

பிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க…

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம்.

இவற்றை ஒழுங்கமைக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் பிரிட்ஜில் பொதுவாக மிகவும் குளிரான பகுதி சற்று சூடான பகுதி என்று சில இடங்கள் உள்ளன. ஆகவே குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே பாதுகாக்க முடியும்.

பிரிட்ஜ் சில பொருட்களை பிரிட்ஜில் தனியாக வைப்பதன் மூலம் அதன் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள் அல்லது காய்கறிகள், சமைக்காத பொருட்கள் போன்றவற்றை சமைத்த உணவுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும். உயர் வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் அதிக குளிர்ச்சி இருக்கும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த ஈரப்பதம் அல்லது க்ரிஸ்பர் என்ற பகுதி உங்கள் பிரிட்ஜில் இருந்தால் அந்த இடத்தில் பழங்களை சேமித்து வைக்கலாம். பழங்களுக்கு பொதுவாக குறைந்த ஈரப்பதம் மட்டுமே தேவைப்படும். அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டும்.

இறைச்சி மற்றும் பால் பொருட்கள்

பிரிட்ஜின் அடிப்பகுதியில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் இறைச்சியை சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பொருட்கள் கெட்டுப் போவது தடுக்கப்படும். இறைச்சியின் சாறு பிரிட்ஜில் சொட்டாமல் இருக்கும் விதத்தில் இறைச்சியை கவனமாக மூடி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். குறிப்பாக மற்ற பொருட்களை வைத்து அதன் மேலே உள்ள அடுக்கில் இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பது நல்லது. பிர்ட்ஜின் பாதி பகுதிக்கு மேலே, பால் பொருட்களை சேமித்து வைக்கலாம். முட்டை மற்றும் சமைக்காத மற்ற பொருட்களைக் கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
மீதமாகும் உணவுகளை எங்கே வைப்பது? தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மீதம் உள்ள உணவை பொதுவாக பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் உணவு எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். மேலும் மேல் பகுதியில் இவற்றை வைப்பதால் உங்களால் எளிதில் மறக்காமல் அதனை எடுத்து காலி செய்ய முடியும்.

பிரிட்ஜின் கதவு பகுதியில் என்ன வைக்கலாம்?

சுவையூட்டிகள் மற்றும் குளிர்பானங்களை பிரிட்ஜின் கதவு பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி பிரிட்ஜில் அதிக வெப்பமயமான பகுதி, கதவை அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருப்பதால் இந்த இடத்தில் இவற்றை வைக்கலாம். குளிர்பானங்களை வைப்பதால் சிந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். இந்த பகுதியில் பால் வைப்பது முற்றிலும் தவறான செயலாகும். பொதுவாக பாலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும்.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker