அழகு..அழகு..புதியவை
கரும்புள்ளிகள் நீங்க இதோ இந்த முறைகளை பின்பற்றி பாருங்க

ஊறவைத்த பாதம் பருப்பு பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி மைய அரைக்க வேண்டும். அதனுடன் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூசி ஊறவைக்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ கரும்புள்ளிகள் மறையும்.
மூன்று டீஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து தடவினால் கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் தேன் கலந்து தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் பேக் தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்தவர கரும்புள்ளிகள் மறையும்.
உருளைக் கிழங்கு சாற்றை தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வெந்தையக்கீரையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவ நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
சந்தனத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்தபின் தண்ணீரால் கழுவவேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வர கரும்புள்ளிகள் நிறம்மாறிவிடும்.