தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைங்க கீழே விழும்போது முதலில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன?… தெரிஞ்சிக்கோங்க

உங்கள் குழந்தைகளின் சிறு வயதில் நன்றாக ஓடிக் கொண்டிருக்க, திடீரென அவர்கள் உட்காரவோ அல்லது விழவோ செய்வார்கள். குழந்தை பிறந்து (ஒரு வருடத்திற்குப் பிறகு) பதிமூன்று மாதங்கள் கழித்து நடக்கக் கற்றுக் கொள்கின்றனர். அப்படி குழந்தை நடக்க ஆரம்பிக்கிற பொழுது கீழே விழுந்து விழுந்து தான் எழுந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தை கீழே விழுந்ததும் எல்லா பெற்றோர்களும் குழந்தையின் தலையில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

விளையாட்டு பொருள்கள்

தலையில் மட்டுமே நாம் கவனம் செலுத்த, கால்கள் தடுமாறுவதை சில சமயம் மறந்தும் விடுவார்கள். குழந்தைகள் நடக்கும் வழியில் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்துவது தடையாக இருக்கும். ஆகவே குழந்தைகள் தவழும் போதும், நடக்கும் போதும் எதுவும் குறுக்கே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நடக்க பழகும் குழந்தைகள் கீழே விழும்போது நாம் பார்க்க வேண்டிய 5 விஷயத்தை இப்போது பார்க்கலாம்.
நிதானமாக இருங்கள்

குழந்தைகள் நடக்கிற பொழுது, திடீரென விழுந்து விடுவார்கள். அப்போது அவர்கள் நிதானமற்று இருந்தார்கள் என்றால், அந்த பதட்டத்தைத் தணிக்க சிறிய அளவில் மருத்துவ உதவி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்படி விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும். நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என பார்த்து மோசமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இவை எல்லாவற்றையும் விட, பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் நிதானமாக இருக்க வேண்டும்.
காது, மூக்கு, வாயில் தண்ணீர் ஒழுகுதல்

குழந்தைகள் கீழே விழுந்தவுடன் காது, மூக்கு அல்லது வாயில் நிறமற்ற நீர் போன்று ஏதேனும் வெளியுறினால் அதை சலைவாய் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அது செரிப்ரோஸ்பைனல் திரவமாகும். இந்த திரவம் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியையே சூழ்ந்திருக்கும். இது மூளையை பாதுகாக்கும் ஒருவகை திரவம். அதனால் இந்த திரவம் வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த திரவம் வெளியேறினால் தலைவலி, கண் பார்வை குறைபாடு, காது கேளாமல் போவது போன்ற பிரச்சனை வரலாம்.

தலையில் அடி

தலையின் மண்டை ஓட்டில் அடிபட்டால் நான்கு விதத்தில் சோதனை செய்யப்படுகிறது.

i. குழந்தையின் மண்டை ஓட்டு எலும்பில் ஏதும் பிரச்சனையா என பார்க்கப்படுகிறது.

ii. தலையில் ஏதும் வெட்டுக்காயம் இருக்கிறதா? என பார்க்கப்படுகிறது.

iii. டையாஸ்டிக் எலும்பு முறிவு சோதனை என்பது குழந்தைகளுக்கு மட்டுமே பார்க்கப்படும் ஒன்றாகும்.

iv. கண் மற்றும் காதுகளுக்கு செல்லக்கூடிய அடிப்படை நரம்புகளும் சரிப்பார்க்கப்படுகிறது.
சுவாசக் கோளாறுகள்

குழந்தைகள் கீழே விழுந்தால் முதலில் சோதனையிட வேண்டியது அவர்கள் விடும் மூச்சு தங்குதடையின்றி இருக்கிறதா? என்பதையே ஆகும். உங்கள் குழந்தை மூச்சு விடும்போது வேகமாக விடுவார்கள் எனில் சில சமயத்தில் 10 முதல் 20 நொடி மூச்சு அடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி பிரச்சனைகளை பார்த்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது மிக நல்லது.

கண்கள் (முழி) வெளிவருதல்

கீழே விழுந்த உங்கள் குழந்தைகளின் கண்கள் வெளியில் வந்தால்… உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். தலையில் அதிர்ச்சி ஏற்படுவது என்பது மூளைக்கு அழுத்தத்தை தந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும். நரம்புகள் சேர்ந்து கண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் கண்கள் வெளிவந்து காணப்படக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. அருகில் உள்ள மருத்துவ வல்லுனரை அணுக வேண்டியது அவசியமாகும்.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker