ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மாதுளம் பூ

மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம் வயிற்றுக்கடுப்பு, உடல்சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும்.
மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக  மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும்.




மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம்  மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக  சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும்  உதிரப்போக்கு  நிவர்த்தியாகும்.




மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker