ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற உதவும் வெற்றிலை

வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில்  உள்ள உரைப்பு கபத்தை நீக்கிவிடும்.
தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள்  எதுவும் கடித்தால்  இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும்.  இது இயற்கை தந்த அற்புதம்.
கொழுந்து வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில்  தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு  மெட்டபாலிசம்  அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.
வெற்றிலைச் சார்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி  விலகும்.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker