ஆரோக்கியம்புதியவை

உடலில் இந்த இடங்களில் வலி இருந்தால், என்னென்ன உறுப்புகள் ஆபத்தில் உள்ளது என அர்த்தம்…!

“வலி”- நாம் பிறக்கும் போதும் நமது உயிரை விடும் போதும் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு வித உணர்வை தருவதே. வலி உடல் அளவிலும் உளவியல் ரீதியாகவும் மாறுபடும். ஆனால், அதன் உணர்வு ஏனோ ஒன்றுதான். உடல் அளவில் ஏற்பட கூடிய வலிகளுக்கு மருந்துகள் கண்டறிய முடியும்.

ஆனால், உளவியல் சார்ந்த வலிகளை குணப்படுத்த நாம் தான் பக்குவமாக கையாள வேண்டும். உடலில் ஒரு சில இடங்களில் வலி ஏற்பட்டால் மோசமான விளைவை கூட தருமாம். எந்தெந்த இடங்களில் வலி ஏற்பட்டால் பேராபத்தை தரும் என்பதை இனி அறிவோம்.

அடி வயிற்றில் வலியா..?

பலர் வயிற்று பகுதியில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். ஆனால், அடி வயிற்றில் வலி இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனெனில் கிட்னியில் கோளாறு, குடல் புற்றுநோய், குடலில் சதை வளருதல் போன்ற பிரச்சினையாக கூட இருக்கலாம். எனவே, அடி வயிற்று பகுதியில் வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.




ஆண்களின் வலி..!

அது என்ன ஆண்களின் வலி..? ஆமாங்க, ஆண்களின் விரைகளில் பயங்கர வலி ஏற்படுமாம். இது போன்ற வலியை கட்டாயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும், உங்களின் பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது சிவந்திருந்தால் பல வித நோய்களுக்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிக்கும் போது வலியா..? நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி இருந்தால் இவை பாலியல் சார்ந்த தொற்று நோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது, உங்கள் துணையுடன் உடலுறவு வைத்து கொள்ளும் போது, ஒரு வித தொற்றுகள் உங்களின் இனப்பெருக்க உறுப்பில் சென்று பல அபாயகரமான நோய்களை தந்து விடுமாம். எனவே, இது போன்று உங்களுக்கு இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நடுமுதுகில் வலியா..? முதுகில் ஏற்பட கூடிய வலிகள் முதுகை மட்டுமே பாதிக்கும் என நாம் நம்பி கொண்டிருந்தோம். ஆனால், நடு முதுகில் வலி இருந்தால் கிட்னியில் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறதாம். இந்த அறிகுறியை அப்படியே விட்டால் சிறுநீரகம் பழுதடைதல், ரத்தத்தில் விஷ தன்மை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.




அடிக்கடி தலை வலியா..?

பலர் இந்த வலியை மிக சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். ஆனால், இவை மூளையையும் நரம்புகளையும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். ரத்த நாளங்களில் பிரச்சினை, மூளை பாதிப்பு, புற்றுநோய், ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம்.

மணிக்கட்டில் வலியா..?

மணிக்கட்டு பகுதியில் வலி இருந்தால், அதற்கு காரணம் இவைதான். அதாவது carpal tunnel syndrome என்றழைக்கபடும் தசை சார்ந்த பிரச்சினையாக இது கருதப்படுகிறது. கைகளில் மணிக்கட்டு பகுதியில், முழங்கை பகுதியில் வலி இருந்தால் சற்றே ஆபத்தான அறிகுறியாகும்.

மார்பக வலியா..?

நம் அனைவருக்குமே நன்கு தெரியும், மார்பகங்களில் வலி ஏற்பட்டால் மாரடைப்பு, இதயம் நோய்களாக இருக்கும் என்பது. ஆனால், இதை தாண்டியும் ஒன்று உள்ளது. மார்பக பகுதியில் வலி இருந்தால் அவை மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம். அதே போன்று, இந்த வலியை தொடர்ந்து தாடை, தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளிலும் வலி உண்டாகும்.




கீழ் முதுகில் வலியா…?

உங்களுக்கு ஏற்படுகின்ற வலி கீழ் முதுகில் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், இந்த வலி பித்தப்பையை பாதித்து, சீறுநீரக பிரச்சினை, கை கால் செயலிழத்தல் போன்ற அபாயகரமான நிலையை தந்து விடுமாம்.

பெண்களின் வலி..!

பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுவது சாகஜம் தான். ஆனால், மாதவிடாய் காலங்கள் அல்லாமல் மற்ற காலங்களில் இது போன்ற வலி இருந்தால், கர்ப்பப்பை கட்டிகளாகவும், சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் உண்டாகியும் இருக்கலாம்.

பாத வலியா..?

பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி இருந்தால் அவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாம். மேலும், இது போன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது சிறந்தது.




Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker