ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்
இட்லி – 8
மைதா – 2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார்(சோளமாவு) – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – ருசிக்கு
சமையல் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – மாவு கலக்க
முட்டைகோஸ் – 1 கப் (விரும்பினால்)
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சாஸ் தயாரிக்க :
பூண்டு – 1+1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 2 மீடியம் சைஸ்
குடை மிளகாய் – 1 பெரியது
ரெட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
லைட் சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – 1+1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 சிட்டிகை
அஜினோமோட்டோ – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கு
செய்முறை :
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.
உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.
கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.