கூந்தல் எண்ணெய் பசையாக இருக்கா?
முடியின் எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு அருமையான தீர்வு தான் இந்த கற்றாழை. கற்றாழை அருமையான பலனை தரும்.
தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை – 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
முதலில் கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக போய் விடும்.
முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவும். எண்ணெய் பசையுள்ள முடியை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள் :
முட்டை 2
எலுமிச்சை 2 ஸ்பூன்
செய்முறை :
முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இதன் பின் தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை விலகி விடும்.