Uncategorised

நா ஊற வைக்கும் மாங்காய் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:


* மீன் -1 கிலோ
* மாங்காய்-1 ( 8 துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)
* சின்ன வெங்காயம் -100 கிராம்
* புளி-100 கிராம்
* தக்காளி-1
* உப்பு -தேவையான அளவு
* மிளகாய் தூள் -2 ஸ்பூன்
* மல்லி தூள் -3 ஸ்பூன்
* தேங்காய் -கால் மூடி
* சோம்பு -1 டீஸ்பூன்
* எண்ணெய் -தேவையான அளவு
* கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்
* கருவேப்பிலை -சிறிது

தாளிக்க வேண்டிய பொருட்கள்:
* எண்ணெய் -தேவையான அளவு
* கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்
* கருவேப்பிலை -சிறிது

அரைக்க வேண்டிய பொருட்கள்:
* தேங்காய் -கால் மூடி
* சோம்பு -1 டீஸ்பூன்

செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு புளியை ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் கரைத்து வைத்த புளி தண்ணீருடன்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றவும்.

* ஊற்றிய பிறகு குழம்பு ஒரு கொதி வந்ததும் அதில் மாங்காய் துண்டுகளை போடவும்.

* மாங்காய் வெந்து குழம்பை சுண்டு போது மீன் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

* சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker